MediMan

உங்கள் MediMan கணக்கை நீக்குங்கள்

உங்கள் MediMan கணக்கை நீக்கலாம். உங்கள் தகவல்களைப் பார்க்க, திருத்த, வேறிடத்துக்கு எடுத்துச் செல்லவும் கோரலாம்.

செயலியில் உங்கள் கணக்கை நீக்குங்கள்

MediMan செயலியைத் திறந்து, உங்கள் சுயவிவரத்துக்குச் சென்று, “Delete Account” (கணக்கை நீக்கு) என்பதைத் தெரிவு செய்யுங்கள். எதுவும் நீக்கப்படுவதற்கு முன், அது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்துவோம்.

செயலி இனி உங்களிடம் இல்லையா?

எந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்தும் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். MediMan கணக்கில் பதிவு செய்த கைபேசி இலக்கத்தையும் சேர்த்து அனுப்புங்கள். எதுவும் நீக்கப்படுவதற்கு முன், அது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்த உங்களைத் தொடர்புகொள்வோம்.

நீக்கக் கோரி மின்னஞ்சல் அனுப்புங்கள்

உங்கள் கோரிக்கை itsupport@mediman.life என்ற முகவரியில் உள்ள எங்கள் குழுவுக்குச் செல்லும்.

உங்களின் பிற உரிமைகள்

  • எங்களிடம் உள்ள உங்கள் தகவல்களின் ஒரு பிரதியைக் கேட்கலாம்.
  • தவறான தகவல்களைத் திருத்தும்படி கேட்கலாம்.
  • உங்கள் தகவல்களை வேறிடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய வடிவத்தில் கேட்கலாம்.
  • நீங்கள் சேர்த்த ஆரோக்கியத் தகவல்களை நீக்குவதன் மூலம் உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறலாம்.

நாங்கள் 30 நாட்களுக்குள் பதிலளிக்க முயல்கிறோம். இது தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளது.

itsupport@mediman.life

நாங்கள் வைத்திருக்க வேண்டியவை

முன்பதிவு விவரங்கள் (சந்திப்புத் திகதிகள், மருத்துவர், சந்திப்பின் வகை, கட்டணக் குறிப்பு இலக்கங்கள்) மருத்துவத் தணிக்கை மற்றும் சட்டக் காரணங்களுக்காக வைத்திருக்கப்படுகின்றன. மற்ற அனைத்தும் நீக்கப்படும், அல்லது யாருடையது என அடையாளம் காண முடியாதபடி மாற்றப்படும்.

தனியுரிமைக் கொள்கை (ஆங்கிலத்தில்)
மருத்துவரைக் கண்டறியுங்கள்செயலியைப் பெறுங்கள்