உங்கள் கைக்குள் அன்றாட ஆரோக்கியக் கருவிகள்
உங்கள் பதிவுகளுக்கும், அன்றாட வழக்கங்களுக்கும், குடும்பத்துக்கும் MediMan செயலியில் உள்ள இலவசக் கருவிகள். ஒவ்வொன்றும் இன்று செயலியில் உள்ளதா என்பதைக் காட்டும்.
செயலியைப் பெறுங்கள்உங்கள் பதிவுகள்
முக்கியமான தகவல்களை ஒன்றாக, எளிதில் கண்டுபிடிக்கும்படி வைத்திருங்கள்.
- செயலியில் உள்ளது
ஆரோக்கியப் பதிவேடு
அறிக்கைகள், மருந்துச் சீட்டுகள், ஸ்கான் படங்களை ஒன்றாக வைத்திருங்கள். பெயரிட்டு வகைப்படுத்தி வைப்பதால், நொடிகளில் கண்டுபிடிக்கலாம்.
நீங்கள் சேர்க்கும் ஆவணங்களை மட்டுமே வைத்திருக்கும். மருத்துவமனைகளிலிருந்து பதிவுகளைச் சேகரிக்காது.
- செயலியில் உள்ளது
ஆரோக்கியக் காலவரிசை
உங்கள் பதிவுகள், அளவீடுகள், மருத்துவர் சந்திப்புகள் திகதி வரிசையில், மாதம் மாதமாக.
- செயலியில் உள்ளது
அவசரகால விவரங்கள்
உங்கள் இரத்த வகை, ஒவ்வாமைகள், நோய் நிலைகள் ஆகியவை, யாருக்காவது தேவைப்படும்போது ஒரே திரையில் தயாராக இருக்கும்.
இது அவசர சேவைகளை அழைக்காது.
உங்கள் அன்றாட வழக்கங்கள்
உங்கள் ஆரோக்கியத்தைச் சரியான பாதையில் வைத்திருக்கும் சிறிய தினசரிப் பழக்கங்கள்.
- செயலியில் உள்ளது
மருந்து நினைவூட்டல்கள்
உங்கள் மருத்துவர் தந்த அட்டவணைக்கான நினைவூட்டல்கள். ஒவ்வொரு வேளை மருந்தையும் எடுத்தது, ஒத்திவைத்தது அல்லது தவிர்த்தது எனக் குறிக்கலாம்.
உங்கள் சொந்த அட்டவணையையே நினைவூட்டும். மருந்தின் அளவு பற்றி ஆலோசனை வழங்காது.
- செயலியில் உள்ளது
என் உடல்நல அளவீடுகள்
இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, ஒட்சிசன் அளவு, உடல் வெப்பநிலை போன்ற அளவீடுகளைப் பதிவு செய்து, அவை எப்படி மாறுகின்றன என்று பாருங்கள்.
நீங்கள் உள்ளிடும் அளவீடுகளையே காட்டும். இது நோய் கண்டறிதல் அல்ல.
- செயலியில் உள்ளது
BMI
உங்கள் உயரம், எடையைக் கொண்டு BMI (உடல் திணிவுச் சுட்டெண்) அளவை எளிய விளக்கத்துடன் பாருங்கள்.
பெரியவர்களுக்கான ஆரம்பநிலைப் பரிசோதனை அளவீடு இது. குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை.
- செயலியில் உள்ளது
மாதவிடாய் கண்காணிப்பு
உங்கள் மாதவிடாய் நாட்களைப் பதிவு செய்யுங்கள். அடுத்தது எப்போது தொடங்கலாம் என்ற மதிப்பீட்டைப் பாருங்கள்.
திகதிகள் மதிப்பீடுகளே. இது கருத்தடைக்கோ, கருத்தரிக்கும் காலத்தை அறிவதற்கோ உரிய கருவி அல்ல.
- செயலியில் உள்ளது
அன்றாட முகப்புப் பலகை
இன்றைய மருந்துகள், அண்மைய அளவீடுகள், நினைவூட்டல்கள் எல்லாம் உங்கள் முகப்புத் திரையில் ஒன்றாக.
ஆதாரமற்ற ஆரோக்கிய மதிப்பெண்கள் எதுவும் காட்டப்படாது.
- செயலியில் உள்ளது
உடல்நிலைச் சரிபார்ப்பு
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை விவரியுங்கள். எந்த வகை மருத்துவர் உதவலாம் என்று பாருங்கள்.
ஒரு வகை மருத்துவரைப் பரிந்துரைக்கும். நோய் கண்டறிதல் செய்யாது.
உங்கள் குடும்பம்
நீங்கள் அக்கறை கொள்ளும் ஒவ்வொருவரையும், அவரவருக்கான தனிச் சுயவிவரத்துடன் கவனித்துக்கொள்ளுங்கள்.
- செயலியில் உள்ளது
குடும்ப ஆரோக்கியம்
குடும்பத்தில் ஒவ்வொருவரின் ஆரோக்கியத் தகவல்களையும் தனித்தனியாக வைத்திருங்கள். அவர்களுக்காக மருத்துவச் சேவையையும் முன்பதிவு செய்யுங்கள்.
குடும்ப உறுப்பினர்களை அவர்களின் அனுமதியுடன் மட்டுமே சேருங்கள். அவர்களின் பெற்றோராகவோ பாதுகாவலராகவோ இருந்தால் சேர்க்கலாம்.
- செயலியில் உள்ளது
குழந்தை ஆரோக்கியமும் தடுப்பூசிகளும்
உங்கள் குழந்தையின் தடுப்பூசிகள், வளர்ச்சி, வளர்ச்சிப் படிநிலைகளைக் கண்காணியுங்கள். அடுத்துப் போட வேண்டிய தடுப்பூசி எது என்று பாருங்கள்.
ஒவ்வொரு தடுப்பூசியையும் உங்கள் குழந்தையின் மருத்துவர் அல்லது மருத்துவ நிலையத்துடன் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இறுதி முடிவு அவர்களுடையது.
உங்கள் சமூகம்
மிகவும் தேவைப்படும்போது உதவத் தயாராக இருங்கள்.
- செயலியில் உள்ளது
இரத்ததானம் செய்பவர் விவரங்கள்
நீங்கள் செய்த இரத்ததானங்களின் பதிவை வைத்திருங்கள். அடுத்து எப்போது தானம் செய்யலாம் என்று பாருங்கள். உங்கள் மாவட்டத்துக்கான அவசர இரத்தத் தேவைகளைப் பெறுங்கள்.
யார் தானம் செய்யலாம் என்பதை இரத்த வங்கியே தீர்மானிக்கும்.
இலவசத் தனிப்பட்ட கருவிகள்
தனிப்பட்ட ஆரோக்கியக் கருவிகளைப் பயன்படுத்தக் கட்டணம் இல்லை. மருத்துவர்களுடனான ஆலோசனைகளுக்கும் பிற கட்டணச் சேவைகளுக்கும் தனியாகக் கட்டணம் அறவிடப்படும். விலையை எப்போதும் முதலிலேயே பார்க்கலாம்.
உங்கள் தகவல்கள் எங்கே வைக்கப்படுகின்றன
நீங்கள் சேர்ப்பவை உங்கள் MediMan கணக்குடன் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகின்றன. எனவே தொலைபேசியை மாற்றினாலும் அவை அப்படியே இருக்கும். நினைவூட்டல்கள் உங்கள் தொலைபேசியிலேயே அமைக்கப்படுகின்றன. எந்தப் பதிவையும், அல்லது உங்கள் முழுக் கணக்கையும், எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்.