MediMan

உதவியும் ஆதரவும்

பொதுவான கேள்விகளுக்கான பதில்கள், எங்கள் குழுவைத் தொடர்புகொள்ளும் வழிகள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சந்திப்பை எப்படி முன்பதிவு செய்வது?

MediMan செயலியைத் திறந்து, ஒரு மருத்துவரைத் தெரிவு செய்து, அவர் திறந்து வைத்துள்ள நேரங்களில் ஒன்றைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் செயலியிலேயே கட்டணம் செலுத்துங்கள். செலுத்துவதற்கு முன் முழுக் கட்டணத்தையும் பார்க்கலாம்.

எந்த வகையான ஆலோசனைகளை முன்பதிவு செய்யலாம்?

MediMan செயலியில் காணொளி, குரல் ஆலோசனைகள் உள்ளன. சில மருத்துவர்கள் தங்கள் மருத்துவ நிலையத்தில் நேரடிச் சந்திப்புகளையும் வழங்குகிறார்கள்.

மருத்துவரைப் பார்க்க நான் பயணம் செய்ய வேண்டுமா?

இல்லை. இணையவழி ஆலோசனைகள் செயலியில் காணொளி அல்லது குரல் அழைப்பு மூலம், வீட்டிலிருந்தே, நல்ல இணைய இணைப்புடன் நடைபெறும். சில மருத்துவர்கள் தங்கள் மருத்துவ நிலையத்தில் நேரடிச் சந்திப்புகளையும் வழங்குகிறார்கள்.

என் மருந்துச் சீட்டுகளை எங்கே காணலாம்?

ஆலோசனைக்குப் பிறகு உங்கள் மருத்துவர் மருந்துச் சீட்டு வழங்கினால், அது செயலியில் அந்தச் சந்திப்புடன் சேமிக்கப்படும். அதை எப்போது வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம்.

என் ஆரோக்கியத் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளனவா?

ஆம். செயலிக்கும் எங்கள் சேவையகங்களுக்கும் இடையே தகவல்கள் மறையாக்கம் செய்யப்படுகின்றன. எங்கள் சேவை வழங்குநர்களிடமும் மறையாக்கம் செய்தே சேமிக்கப்படுகின்றன. உங்கள் தரவை நாங்கள் விற்பதில்லை, விளம்பரத்துக்கும் பயன்படுத்துவதில்லை.

எப்படிக் கட்டணம் செலுத்தலாம்?

கடன் அட்டை அல்லது பற்று அட்டை மூலம் செலுத்தும் கட்டணங்களை PayHere பாதுகாப்பாகக் கையாளுகிறது.

சந்திப்பை மாற்றவோ இரத்துச் செய்யவோ முடியுமா?

ஆம், செயலியிலேயே செய்யலாம். சந்திப்பு நேரத்துக்கு 2 மணி நேரம் முன்பு வரை இரத்துச் செய்யலாம். செயலியில் காட்டப்படும் இரத்து விதிகளின்படி, பணம் உங்கள் MediMan பணப்பைக்குத் திருப்பிச் செலுத்தப்படும்.

என் மருத்துவப் பதிவுகளை எப்படிப் பார்ப்பது?

உங்கள் சந்திப்புகளின் குறிப்புகளும் மருந்துச் சீட்டுகளும் செயலியில் இருக்கும். உங்கள் சொந்த அறிக்கைகளை ஆரோக்கியப் பதிவேட்டில் சேர்க்கவும் செய்யலாம்.

சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறலாமா?

ஆம். MediMan செயலியில் பல துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். மருத்துவர் பட்டியலில் உள்ள வடிகட்டிகளைப் பயன்படுத்தி ஒருவரைக் கண்டறியுங்கள்.

செயலியில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வது?

செயலியின் உதவிப் பகுதியிலிருந்து எங்கள் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள். அல்லது support@mediman.life என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

எது இலவசம், எதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்?

செயலியைப் பதிவிறக்குவதும், அதன் தனிப்பட்ட ஆரோக்கியக் கருவிகளைப் பயன்படுத்துவதும் இலவசம். மருத்துவர்களுடனான ஆலோசனைகளுக்குக் கட்டணம் உண்டு. செலுத்துவதற்கு முன் முழுக் கட்டணத்தையும் பார்க்கலாம்.

என் அழைப்பு இணையாவிட்டால் என்ன செய்வது?

உங்கள் இணைய இணைப்பைச் சரிபார்த்து, செயலியில் அந்தச் சந்திப்பை மீண்டும் திறந்து பாருங்கள். அப்போதும் வேலை செய்யவில்லை என்றால், செயலியிலிருந்து உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள். நடைபெற முடியாத ஆலோசனை, பணம் திருப்பிச் செலுத்தும் விதிகளின்படி கையாளப்படும்.

என் குடும்பத்துக்காக முன்பதிவு செய்யலாமா?

ஆம். செயலியில் குடும்ப உறுப்பினர்களைச் சேருங்கள். ஒவ்வொருவரின் ஆரோக்கியத் தகவல்களையும் தனித்தனியாக வைத்திருங்கள். முன்பதிவு செய்யும்போது, சந்திப்பு யாருக்கானது என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

என் கணக்கை எப்படி நீக்குவது?

செயலியில் உங்கள் சுயவிவரத்தைத் திறந்து, “Delete Account” (கணக்கை நீக்கு) என்பதைத் தெரிவு செய்யுங்கள். செயலி இனி உங்களிடம் இல்லையென்றால், இந்த இணையத்தளத்தில் உள்ள கணக்கு நீக்கப் பக்கத்தைப் பயன்படுத்துங்கள்.

MediMan இணையப் பதிப்பு உள்ளதா?

இன்னும் இல்லை. இணையப் பதிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. அதுவரை, உங்கள் தொலைபேசியில் MediMan செயலியைப் பயன்படுத்துங்கள்.

எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்

செயலி, உங்கள் கணக்கு அல்லது ஒரு முன்பதிவு தொடர்பான உதவிக்கு.

எங்களால் முடிந்த அளவு விரைவாகப் பதிலளிப்போம்.

மின்னஞ்சல்
support@mediman.lifehello@mediman.life
தொலைபேசி
+94 11 466 8668
முகவரி
#95 KKS Road, Jaffna, Sri Lanka

உங்கள் ஆரோக்கியம் பற்றிய கேள்விகள்

அறிகுறிகள், அறிக்கைகள், மருந்து விவரங்களை உதவி மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவக் கேள்விகளுக்கு, செயலியில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனைக்கு முன்பதிவு செய்யுங்கள்.

MediMan அவசர சேவை அல்ல. அவசர நிலையில், உங்கள் பகுதியின் அவசரத் தொலைபேசி இலக்கத்தை அழையுங்கள், அல்லது அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

மருத்துவரைக் கண்டறியுங்கள்செயலியைப் பெறுங்கள்