தனியுரிமையும் நம்பிக்கையும்
MediMan செயலியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடியவை, எளிய சொற்களில்.
மருத்துவர்களின் தகவல்கள்
எங்கள் குழு மருத்துவர்களின் மருத்துவச் சபைப் பதிவையும் அடையாள ஆவணங்களையும் பரிசீலித்த பின்னரே, அவர்கள் MediMan செயலியில் இணைகிறார்கள். ஒவ்வொரு சுயவிவரமும் அவர்களின் பதவி, அனுபவம், அவர்கள் பேசும் மொழிகள், கட்டணம் ஆகியவற்றைக் காட்டும். மருத்துவர்கள் சுயாதீனமான தொழில்முறை நிபுணர்கள். மருத்துவ முடிவுகள் அவர்களுடையவை.
மருத்துவச் சேவைக் கட்டணம்
செயலியும் அதன் தனிப்பட்ட ஆரோக்கியக் கருவிகளும் இலவசம். ஆலோசனைகளுக்குக் கட்டணம் உண்டு. செலுத்துவதற்கு முன் முழுக் கட்டணத்தையும் பார்க்கலாம். இரத்துச் செய்யப்பட்ட ஆலோசனைகளுக்கான பணம் உங்கள் MediMan பணப்பைக்குத் திருப்பிச் செலுத்தப்படும்.
உங்கள் ஆரோக்கியத் தகவல்கள்
எந்த ஆரோக்கியத் தகவலைச் சேர்ப்பது என்பதை நீங்களே முடிவு செய்கிறீர்கள். சேர்ப்பது கட்டாயம் அல்ல. எப்போது வேண்டுமானாலும் அவற்றைத் திருத்தலாம் அல்லது நீக்கலாம். உங்கள் தரவை நாங்கள் விற்பதில்லை, விளம்பரத்துக்கும் பயன்படுத்துவதில்லை.
குடும்பச் சுயவிவரங்கள்
குடும்ப உறுப்பினர்களை அவர்களின் அனுமதியுடன் மட்டுமே சேருங்கள். அவர்களின் பெற்றோராகவோ பாதுகாவலராகவோ இருந்தால் சேர்க்கலாம். ஒவ்வொருவரின் தகவல்களும் அவரவர் சுயவிவரத்திலேயே இருக்கும்.
இணையவழி மருத்துவத்தின் எல்லைகள்
MediMan அவசர சேவை அல்ல. இணையவழி ஆலோசனைகள் பல அன்றாடப் பிரச்சினைகளுக்கு ஏற்றவை. ஆனால் அவசர நிலைகளுக்கும், நேரில் பரிசோதிக்க வேண்டிய பிரச்சினைகளுக்கும் ஏற்றவை அல்ல.
உங்கள் கணக்கும் தரவும்
உங்கள் கணக்கைச் செயலியிலோ எங்கள் இணையத்தளத்திலோ நீக்கலாம். உங்கள் தரவின் ஒரு பிரதியைக் கேட்கலாம், அல்லது அதைத் திருத்தும்படி கேட்கலாம்.